அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில், சங்கரன்கோயில் - 627756, தென்காசி .
Arulmigu Sankaranarayanaswamy Temple, Sankarankoil - 627756, Tenkasi District [TM037875]
×
Temple History
தல வரலாறு
மணிக்கிரீவன் எனும் தேவன் அன்னை பார்வதி தேவியின் சாபத்தால் பறையனாகி புன்னைவனத்தில் காவலாக இருந்தான். அதனால் அவன் காவல் பறையன் எனப் பெயர் பெற்றான். கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதருக்குப் புன்னை வனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் மணிக்கிரீவனே காவல் பறையனாகப் காவல் இருந்து வந்தார். அத்தோட்டத்தின் அருகில் புற்று ஒன்று வளர்ந்திருந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்து பாம்பின் வால் வெட்டப்பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அந்நேரம் உக்கிரபாண்டிய மன்னர் அடுத்தவனத்தில் ...மணிக்கிரீவன் எனும் தேவன் அன்னை பார்வதி தேவியின் சாபத்தால் பறையனாகி புன்னைவனத்தில் காவலாக இருந்தான். அதனால் அவன் காவல் பறையன் எனப் பெயர் பெற்றான். கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதருக்குப் புன்னை வனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் மணிக்கிரீவனே காவல் பறையனாகப் காவல் இருந்து வந்தார். அத்தோட்டத்தின் அருகில் புற்று ஒன்று வளர்ந்திருந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்து பாம்பின் வால் வெட்டப்பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அந்நேரம் உக்கிரபாண்டிய மன்னர் அடுத்தவனத்தில் வந்த சேதி குறித்து அறிந்து நடந்த செய்தியைத் தெரிவிக்க ஓடினான்.
மானூரை அரசாண்டு வந்த உக்கிரபாண்டிய மன்னர் அடிக்கடி மதுரை சென்று அன்னை மீனாட்சியையும் சொக்கலிங்கனாரையும் தரிசிக்கும் வழக்கம் உடையவர். காவல்பறையன் மணிக்கிரீவன் புற்றை வெட்டிய இடத்தில் சிவலிங்கத்தைக் கண்ட நாளில் பாண்டியனுடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியன் செய்வது அறியாமல் திகைத்து நிற்கையில் காவல் பறையன் வந்து மன்னரிடம் செய்தியைத் தெரிவிக்க உடன் மன்னருடன் புன்னை வனம் சென்றனர்.
உக்கிரபாண்டியன் சென்று புற்றினையும், புற்றிடங்கொண்டாரையும், காடு கெடுத்து நாடாக்கி கோவில் கட்டி சங்கரன்கோவில் ஊரையும் உருவாக்கினார். கோவில் கோபுரத்தைத் தாண்டியதும் காவற்பறையனான மணிக்கிரீவர் திருவுருவத்தினை இப்போதும் நாம் காணலாம். சங்கரலிங்கனார் சன்னதியின் வலப்பக்கத்தூணில் உக்கிரபாண்டிய மன்னரின் திருவுருவம் காணப்படுகிறது. யானை பெரிய கொம்பினால் குத்திய இடத்தில் உருவாகிய ஊர் பெருங்கோட்டூர் எனப்பெயர் பெற்றது. . . , .
தல பெருமை
இம்மைப் பயனையும் மறுமைப்பயனையுந் தலம், தீர்த்தம், முர்த்தி கொடுக்குமிடம் எந்தவுலகத்திலும் கிடையாது. அஃது இந்தப் பூமியின் கண்ணுள்ளது. உங்களுக்கு உள்ளன்பாகச் சொல்லுவேன். மனமொற்றுமைப்பட நீங்கள் கேளுங்க ளென்று சங்கரேசுதரைத் தியானித்துச் சூதமுனிவர் சொல்லுவாராயினர்.
மேலே கூறிய வரராசையாகிய தலத்திலே சரியை மார்க்கத்தில் நின்றவர் சிலோகத்தை உடையவர். கிரியை வழியிற் சென்றவர். சிவபெருமான் பக்கத்திற் போயிருப்பன், யோகஞ்செய்தவர் சிவசாரூபம் பெறுவர். ஞானத்தை ஆராய்ச்சி செய்தவர் சாயுச்சிய பதவியடைவர். நீசருடன் சிநேகித்துத் தீய வழியிலே சென்றவரும் கொலையாளியானவரும் வாராசையில் வந்து சேர்ந்தால் சன்மார்க்கமுடையராய் அறிவிற்சிறந்து பிறவிப்பிணியை நீங்குவர். சங்கரர் எழுந்தருளியிருக்கும் இந்தத்...இம்மைப் பயனையும் மறுமைப்பயனையுந் தலம், தீர்த்தம், முர்த்தி கொடுக்குமிடம் எந்தவுலகத்திலும் கிடையாது. அஃது இந்தப் பூமியின் கண்ணுள்ளது. உங்களுக்கு உள்ளன்பாகச் சொல்லுவேன். மனமொற்றுமைப்பட நீங்கள் கேளுங்க ளென்று சங்கரேசுதரைத் தியானித்துச் சூதமுனிவர் சொல்லுவாராயினர்.
மேலே கூறிய வரராசையாகிய தலத்திலே சரியை மார்க்கத்தில் நின்றவர் சிலோகத்தை உடையவர். கிரியை வழியிற் சென்றவர். சிவபெருமான் பக்கத்திற் போயிருப்பன், யோகஞ்செய்தவர் சிவசாரூபம் பெறுவர். ஞானத்தை ஆராய்ச்சி செய்தவர் சாயுச்சிய பதவியடைவர். நீசருடன் சிநேகித்துத் தீய வழியிலே சென்றவரும் கொலையாளியானவரும் வாராசையில் வந்து சேர்ந்தால் சன்மார்க்கமுடையராய் அறிவிற்சிறந்து பிறவிப்பிணியை நீங்குவர். சங்கரர் எழுந்தருளியிருக்கும் இந்தத் தலத்தின் பெருமையை நினையாமல் எந்தக்காரணத்தாலாவது அவ்விடத்துக்கு வந்து ஒரு இராத்திரி வசிப்பாரானால் மனத்தழுக்கற்றுச் சிவனடியார்க்குத் தொண்டராகி மோஷத்தையடைவர். ஒருநாளங்கிருந்தவர் முற் சென்மத்திற் செய் பாவத்தை நீங்குவர், இரண்டு நாளிருந்தவர் இப்பிறப்பிற் செய்த பாவத்தை நீங்குவர். மூன்றுநாளிருந்தவர் மறுமையிற் செய்யும் பாவங்களைப் போக்குவர். இது வேதவாக்கிமென்று நம்புபவர் மோஷத்தை யடைவர்.
ஞாயிற்றுக் கிழமையில் அந்தத் தலத்திலிருந்து சூரியனைத்தியானித்து விரதமிருப்பவர் கண்களில் வரும் வியாதியில்லாமலிருந்து முடிவிலே சூரியமண்டலத்தை யடைந்து பரகதி சேருவர். சோமவாரத்தில் இங்கிருந்து சந்திரனை வணங்கி விரதமிருப்பவர். சந்திரனுடைய பதவியைப் பெற்றுச் சிவகணங்கள் வணங்கச் சிவலோகத்தை யடைவர். செவ்வாய்க்கிழமை விரதத்தை இத்தத்தலத்தில் அநுட்டித்தவர் சனிதோஷத்தினாலே வரும் வியாதி முதலியவை நீங்கிச் செவ்வாயின் கிருபையைப் பெற்றுச் சிவபோகமநுபவிப்பர். சந்திரன் புத்திரனாகிய புதன்கிழமை விரதமிருப்பவர் கல்வியிற் சிறந்து சிலலோகஞ் சேருவர். வியாழக்கிழமை விரதமிருப்பவர் வியாழப்பதவியடைந்து சிவபதவி பெறுவர். ஒருநாளாவது சுக்கிரவார விரதமிருந்தவர் இந்திர செல்வம் பெற்றுச் சாயுச்சிய பதவியடைவர். துன்பமெலாம் தீரும்பொருட்டு அந்தத் தலத்திற் சனிக்கிழமை விரதமிருந்தவர் பொறாமை முதலிய துர்க்குண நீங்கச் சனிபதவியடைந்து உள்ளும் புறமுமொத்துச் சங்கரேசர் திருவடியை யடைவர்.
ஒரு வருடம் பழமும் ஒரு வருடம் சருகும் ஒருவருடம் தண்ணீரும் ஒருவருடம் காற்றும் புசித்துப் பிறதலங்களிலே தவஞ்செய்வோர் பெறும் பயன் இந்தத்தலத்தில் ஒரு காலம் விரதமிருந்தவருக்குக் கிடைக்கும். வேறு தலத்திற் நூறு அசுவமேதஞ் செய்த பலன் இத்தலத்திலொரு அசுவமேதம் கொடுத்தருளும். வாசபேயம், பவுண்டரம், இராசசூயம் என்னும் யாகங்கள் நூறு பிறதலத்திற்செய்தபலன், இந்தத்தலத்திற்செய்த அக்கினிட்டோமம் ஒன்று கொடுத்தருளும். பிதாவையுங் குருவையும் நிந்தித்து அடித்தவரும் அடைக்கலப்பொருளைக் காவாதவரும் தரித்திரருக்கு ஒன்றுங்கொடாதவரும் வாராசையாகிய இத்தலத்தில் வந்தால் கதியடைவர். சங்கரேசுரரே புற்றுமண்ணை மருந்தாகக் கொடுக்கின்ற காரணத்தினாலே பூமியிலுள்ள தலங்கட்கெல்லா மிந்தத் தலமேயுயர்ந்தது. சிவகணங்களுக்குள் திருநந்திதேவரும், பெண்களுக்குள் கற்புடைப்பெண்களும், பாம்புகளுக்குள் ஆதிசேடனும், நவரத்நங்களுக்குள் வைரமும், சாத்திரங்களுக்குள் அத்துவிதமும், இராசிகளுக்குள் சிம்மராசியும் தேவர்களுக்குள் இந்திரனும், மேகங்களுக்குள் பொன்மழை பெய்யு மேகமும், மிருகங்களுக்குள் கஸ்தூரிப்பூனையும், இலைகளுக்குள் வில்வமும், பாணங்களுக்குள் பாசுபதாஸ்திரமும், சத்திகளுக்குள் கோமதியாகிய உமாதேவியும், பூவினுள் தாமரையும், குருக்களுக்குள் வியாழபகவானும், பொன்களுக்குள் சாம்பூநதப்பொன்னும், முனிவருக்குள் அகத்திய முனிவரும், பிள்ளைகளுக்குள் பகீரதனும், கதைகளுக்குள் சிவகதையும் உயர்ந்தன போலத் தலங்களுக்குள் வாராசைத்தலம் உயர்ந்தது.
சென்ற பிறப்பிலும் இப்பிறப்பிலும் இனிவரு பிறப்பிலும் செய்த, செய்கின்ற, செய்யும் பாவங்கள் வராமற்றடுக்கும் பெருமையுள்ள இந்தத்தலத்தின் பெருமையாவர் சொல்ல வல்லவர். இந்தத் தலத்துக்குப் பெயர்கள் புன்னைவனம், சீராசை, வாரரசைபுரம் என்று சொல்லப்படும். இத்தலத்தில் சிவனடியார் வந்தால் எதிர்கொண்டு போதல், பணிதல் பாதங்களை விளக்கல், ஆசனங்கொடுத்தல், வாசனைப்பண்டம், மலர் தூப தீபங்களாற் பூசித்தல் செய்து பலகாரம் பாயாசத்துடன் அமுது செய்வித்தவர்கள், அன்னிய தலத்தில் லஷம் சிவனடியார்களுக்கு அது செய்வித்த பலனடைந்து திருக்கையலாயத்திற் சிவகணங்கள் வணங்கும்படி வீற்றிருப்பர். ஒரு பசுவை இத்தலத்தில் பிராமணருக்குத் தானஞ்செய்தவர் காமதேனு தமக்கு ஏவல் செய்யத் தேவேந்திர பதவியடைவர். கன்னிகாதானமிந்தத் தலத்தில் செய்தவர் பிறதலத்தில் நாடோறும் ஆயிரங்கன்னிகாதானஞ் செய்த பயனைப்பெறுவர். விபூதி யுருத்திராக்கமணிந்து சிவபிரான்றிருவடிகளைத் துதியாதவரும் புலையராய் பிறந்தவரும் வழிநடக்கும்போது காலால் இத்தலைத்தை ஸ்பரிசித்தாரானால் மேற்குலத்திற் பிறந்து மெய்ஞ்ஞானிகளாவர். தூரதேசத்திலிருந்து இத்தலத்தின் மான்மியத்தைக் கேட்டவரும் கடந்து வரச்சத்தியற்று இத்தலத்தை மனதில் நினைப்பவரும் தரிசனஞ்செய்யக் கண்ணில்லாமல் மனதில் நினைத்தவரும் உயர்ந்த கதியடைவார்களென்றால் வாராசைத்தலத்தின் பெருமையைச் சொல்லமுடியுமா?
இத்தலத்திற் சிவனடியார்களுக்குப் பாதரஷை, குடை, வஸ்திரம், கோவணம், ஊன்றுகோல், விசிறி முதலியவற்றைத் தானஞ்செய்தவர் சிவகணங்கள் விமானஞ்சுமப்ப அதிலேறிச் சிவலோகம் போய்ச் சேருவர். எந்ததத்தவத்தின் பலனும், பெரும் பயனும் இந்தத் தலமே கொடுக்குமென வேதங்கள் சொல்லும் என்றனர். மலைபோலுயர்ந்த தவசிரேட்ட முனிவர் குற்றங்கள் முழுவதும் நீங்கிய சூதமுனிவர் திருவடியை வணங்கி இன்று நீர் அருளிச்செய்த தலவிசேடமே நல்லது. இனித்தீர்த்த விசேடங்கூறியருளுக என்றனர். அது கேட்ட சூதமுனிவர் முருகக்கடவுளைப் பெற்ற சங்கரேசுரை யிருதயதாமரையில் நிறைவாக வைத்துத் தரிசித்தவர்கள் பிறவிப்பிணியைப் போக்கும் தீர்த்த விசேடத்தைச் சொல்லத் தொடங்கினர்.